திடீர் மூச்சுத்திணறல்! சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சஞ்சய் தத்தின் தற்போதைய நிலை என்ன? வெளியான தகவல்!
Sanjay dutt returned home after treatment
பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ரிசல்ட் நெகட்டிவ் என வந்திருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் நிம்மதி அடைந்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து இருநாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தின் உடல் நிலை சீரடைந்து, நல்ல நிலையை அடைந்த நிலையில் அவர் நேற்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.