சினிமாவிலிருந்து திடீர் விலகல்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Sanjay dutt short break from cinema for medical treatment
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொண்ட நிலையில், முடிவில் ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது.
ஆனாலும் இரு நாட்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவந்த நடிகர் சஞ்சய் தத் உடல் நலம் சீரான நிலையில் நேற்றுவீடு திரும்பினார். இத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் தனது டுவிட்டர் பக்கத்தில், வணக்கம் நண்பர்களே.. சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் உடன் உள்ளனர். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று என்நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் சஞ்சய் தத் விரைவில் குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.