"சென்னையின் நிலைக்கு காரணம் தவறான நிர்வாகமே" - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்.!
சென்னையின் நிலைக்கு காரணம் தவறான நிர்வாகமே - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்.!
தலைநகர் சென்னையை வாட்டி வதைத்த மிக்ஜாங் புயலின் காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். புயல் ஓய்ந்த போதிலும், அதன் தாக்கம் பல இடங்களில் வெள்ளங்களை ஏற்படுத்தி மக்களை சிரமப்படுத்தி வருகிறது.
நகரில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சில இடங்களில் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான இடர்பாடுகளுக்கு "தவறான நிர்வாகம், அலட்சியம், பேராசை போன்றவையே காரணம்.
கொளப்பாக்கம் பகுதியில் திறந்தவெளி நிலங்கள் மற்றும் குளங்கள் அதிக அளவில் இருந்தும், ஒரே கால்வாயில் கழிவு நீருடன் மழை நீரும் வெளியேற்றப்படுகிறது. இவை மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது" என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.