தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகானின் சரக்கு பட போஸ்டர்.! படக்குழுவிற்கு கோர்ட் பிறப்பித்த உத்தரவு!!

சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகானின் சரக்கு பட போஸ்டர்.! படக்குழுவிற்கு கோர்ட் பிறப்பித்த உத்தரவு!!

Sarakku movie poster facing controversy Advertisement

இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவான திரைப்படம் சரக்கு. இந்த திரைப்படத்தில் மன்சூர் அலிகான் வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் சரக்கு படத்தில் நடிகை வலீனா, யோகி பாபு, பாக்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், தீனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது.

சரக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மதுபாட்டில் இடம்பெற்றிருந்தது. மேலும் அந்த பாட்டிலின் கழுத்து பகுதியில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை போன்று இடம்பெற்றிருந்தது. இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை நகர உரிமையியல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

Sarakku

இந்த வழக்கு குறித்து நீதிபதி சுந்தரராஜன் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரக்கு படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள கழுத்துப்பட்டையை நீக்கம் செய்ய வேண்டும் என படக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sarakku #Mansoor alikhan #poster
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story