ரொம்ப ஆசைங்க.. விஜய்கூட அம்மாவா நடிக்கணும் - சரண்யா பொன்வண்ணன் ஓபன்டாக்..! ஆசை நிறைவேறுமா?..!!
ரொம்ப ஆசைங்க.. விஜய்கூட அம்மாவா நடிக்கணும் - சரண்யா பொன்வண்ணன் ஓபன்டாக்..! ஆசை நிறைவேறுமா?..!!
தமிழ் திரை உலகில் மிகவும் பிசியான அம்மா என்று கேட்டால் சரண்யா பொன்வண்ணன் என்று தான் பலரும் கூறுவார்கள். கமலஹாசனின் நாயகன் திரைப்படம் மூலமாக அறிமுகமான சரண்யா பொன்வண்ணன், 80 மற்றும் 90-களில் கதாநாயகியாகவும் இருந்தார்.
தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகனுக்கு தாயாக நடித்து வருகிறார். அம்மாவாக நடிக்கும் இவர் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறமையால் வாழ்ந்து இருப்பார். அஜித், சூர்யா, விக்ரம், உதயநிதி, கார்த்திக், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், மாதவன், சசிகுமார், விமல் போன்ற பல்வேறு நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துள்ளார்.
ஆனால், தற்போது வரை விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த விஷயம் தொடர்பாக அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். விஜயுடன் நடிக்க அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.
எனக்கு நடிகர் விஜயுடன் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது. அந்த எண்ணம் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்தார்.