"அது சும்மா காமெடிக்காக பேசினேன்" அந்தர்பல்டி அடித்த சரத்குமார்..
அது சும்மா காமெடிக்காக பேசினேன் அந்தர்பல்டி அடித்த சரத்குமார்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சரத்குமார். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் மதுரையில் மேடையில் இவர் பேசியது சர்ச்சைக்குள்ளாகி பரவி வருகிறது.
அவர் மேடையில் பேசியதாவது, "எனக்கு 69 வயது நடக்கிறது. ஆனால் இப்போதும் நான் இளமையாக இருக்கிறேன். இன்னும் 150 வருடங்கள் வரை உயிருடன் இருப்பேன். அப்படி இருப்பதற்கான வித்தை எனக்கு தெரியும். அந்த ரகசியத்தை நீங்கள் என்னை சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க வைத்தால் நான் கூறுகிறேன்"
மேலும் இவ்வாறு கூறிய இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து இதற்கு விளக்கம் அளித்த சரத்குமார், "எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதை மறுக்காமல் உண்மையை கூறி வெளிப்படையாக இருக்கிறேன். முதலமைச்சராக யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.
மீட்டிங்கில் பேசும்போது மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நகைச்சுவைக்காக பேசினேன். இதனை இவ்வளவு சீரியஸாக விஷயமாக இணையத்தில் பரவி வருவது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. யாராலயும் இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருக்க முடியாது" என்று கூறியிருக்கிறார். இவ்வாறு சரத்குமார் அந்தர்பல்டி அடித்த விஷயம் மீண்டும் இணையத்தில் பரவி ரசிகர்கள் சரத்குமாரை கலாய்த்து வருகின்றனர்.