ஆத்தாடி! நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சிதானே இது! இதுக்கு மட்டும் இத்தனை கோடியா? வைரலாகும் மிரட்டல் புகைப்படங்கள்!
saravana store arul dance for movie photo viral
சென்னையிலேயே மிகவும் பிரபலமான கடைகளில் ஒன்றாக இருப்பது லெஜெண்ட் சரவணா ஸ்டோர். அதில் தனது இடைவிடாத உழைப்பால் உயர்ந்து இன்று மிகப்பெரிய தொழிலதிபராக திகழ்பவர் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி. இவர் தனது கடை விளம்பரத்திற்கு தானே நடித்திருந்தார். மேலும் இதனால் பல விதமான கிண்டலுக்கு ஆளானார்.
ஆனாலும் அதனை பொறுத்தப்படுத்தாத அவர் தொடர்ந்து தனது கடைகளின் விளம்பர படங்களில் பல ஹீரோயின்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு களமிறங்கிய அவர் தற்போது உல்லாசம் பட இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த புரொடக்ஷன் நம்பர் 1 படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக மாடலிங்கான கீர்த்தி டிவாரி நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் 10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக பாடல் ஒன்று தயாராகியுள்ளது. இதில் அசரவைக்கும் அட்டகாசமான செட்டில் நடன கலைஞர்களுக்கு மத்தியில் அண்ணாச்சி நடனமாடியுள்ளார்.மேலும் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.