ரசிகர்களின் சந்தேகத்திற்காக, தனது பலநாள் ரகசியத்தை பளீரென போட்டுடைத்த சரவணன் மீனாட்சி ரட்ஷிதா!!
saravanan meenachi interview about her serial
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களுள் ஒன்று சரவணன் மீனாட்சி. இதில் பல நடிகர்கள் மாறினாலும், தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக மாறாமல் மீனாட்சியாக நடித்தவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி.
ரச்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் அதில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் நிறைவு பெற்றவுடன் சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார்.மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாச்சியார்புரம் என்ற தொடரில் தனது கணவர் தினேஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரக்ஷிதா பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்பொழுது அவர் பிரிவோம் சந்திப்போம் தொடர எனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு சீரியல். இந்த சீரியலுக்கு பிறகு ரசிகர்கள் என்னிடம் அவ்வளவு கருப்பாக இருந்தீர்களே! இப்போது எப்படி இவ்வளவு கலராக மாறிட்டிங்க எப்படி என கேட்டுக்கொண்டே இருப்பர். நான் அப்பொழுதெல்லாம் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விடுவேன்.
ஆனால் அந்த சீரியலில் நடித்த போதும் நான் கலராகத்தான் இருந்தேன். சீரியலுக்காக நான் ப்ளாக் மேக்கப் போட்டிருந்தேன் மூன்று வருஷம் அதே மேக்கப்போடுதான் இருந்தேன். மேலும் அதனாலேயே பிரிவோம் சந்திப்போம் சீரீயல் டைரக்டர் நீங்க இந்த சீரியலில் நடிக்க நாங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்ன்னு சொல்லிகிட்டே இருக்காங்க என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.