சுழன்றடிக்கும் சூறாவளியாய் மகேஷ் பாபு! அழகு சிலையாக கீர்த்தி சுரேஷ்! வேற லெவலில் மிரட்டும் சர்காரு வாரி பாட்டா ட்ரைலர்!!
சுழன்றடிக்கும் சூறாவளியாய் மகேஷ் பாபு! அழகு சிலையாக கீர்த்தி சுரேஷ்! வேற லெவலில் மிரட்டும் சர்காரு வாரி பாட்டா ட்ரைலர்!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சர்க்காரு வாரி பட்டா. இப்படத்தில் ஹீரோயினாக, முதன்முறையாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, வெண்ணெல கிஷோர், நதியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பருசுராம் பெட்லாவி இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
மாஸ் ஆக்ஷன் படமான இந்தப் படம் மே 12-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சர்க்காரு வாரி பட்டா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தையே மிரள வைத்து வருகிறது. மேலும் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.