அடுத்த ரவுண்டுக்கு ரெடி.! விரைவில் உருவாகிறது சார்பட்டா பரம்பரை 2.! ஹீரோ யார் தெரியுமா??
அடுத்த ரவுண்டுக்கு ரெடி.! விரைவில் உருவாகிறது சார்பட்டா பரம்பரை 2.! ஹீரோ யார் தெரியுமா??
நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை.. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படம் கொரோனா பரவல் காரணமாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இப்படம் வடசென்னை பகுதியில் பிரபலமாக நடக்கும் குத்துச்சண்டை மற்றும் அதனால் ஏற்படும் மோதல்கள் போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவானது.
இந்த படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஹீரோவாக ஆர்யாவே நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை 2 தியேட்டரில் ரிலீஸாகவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.