×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனர் சிகரங்கள் செய்ய முடியாததை செய்து காட்டிய சசிகுமார்! இவரோட மகன் தான் ஹீரோவா!

இயக்குனர் சிகரங்கள் செய்ய முடியாததை செய்து காட்டிய சசிகுமார்! இவரோட மகன் தான் ஹீரோவா!

Advertisement

2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்பிரமணியபுரம் திரைப்படம்  இந்திய சினிமாவையே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது என்றால் மிகை ஆகாது. அந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும்  மற்றும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அதன் பிறகு ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சசிகுமார் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார். சமீபத்தில் கூட இவரது  நடிப்பில் வெளியான அயோத்தி என்ற திரைப்படம்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.

தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் இயக்குனராக தனது பணியை தொடங்கி இருக்கிறார். சசிகுமார் இயக்குனராகப் போகிறார் என்ற செய்தி சமீப காலமாக வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த செய்தி உறுதியாகி  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது ஒருபுறமிருக்க இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் முயற்சி செய்தும் எடுக்க முடியாமல் போன குற்ற பரம்பரை  நாவலை வெப்சீரிஸாக இயக்க இருக்கிறார் சசிகுமார். இந்த நாவல் நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதியது. இந்த இணையதள தொடரில்  புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன்  கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருடன் சத்யராஜ் மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த இணையதளத் தொடரை தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் தயாரித்து ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பு தொடர்பாக இசை ஞானியிடம்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவிலேயே இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sasikumar #director #Kutra parambarai #webseries #Vijay kanth son
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story