ஈடு செய்யமுடியாத இழப்பு! வேதனையில் கண்ணீர் விட்ட நடிகர் சத்யராஜ்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
தமிழில் இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கியவர் ஜனநாதன். 61 வயது நிறைந்த இவர் விஜய் ச
தமிழில் இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஜனநாதன். 61 வயது நிறைந்த இவர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படத்தை இயக்கி வந்துள்ளார். இந்த நிலையில் அப்படத்திற்கான எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் சமீபத்தில் மதியஉணவு சாப்பிட வீட்டிற்கு சென்ற நிலையில் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இந்நிலையில் அவருடைய உதவியாளர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது இயக்குனர் ஜனநாதன் வீட்டில் மயங்கிய நிலையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு பிரபலங்கள் பலரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ஜனநாதன் மரணம் குறித்து நடிகர் சத்யராஜ் கண்கலங்கிய படி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.பி.ஜனநாதன் உயர்ந்த சிந்தனையுள்ள அற்புதமான இயக்குநர். முற்போக்கு சிந்தனையாளர். என்னுடைய இனிய நண்பர். அவருடைய மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என இரங்கல் தெரிவித்துள்ளார்.