ரஜினி மகளின் இரண்டாவது திருமணத்திற்கு இந்த பிரபல அரசியல்வாதிதான் காரணமாம்!
Saundharya rajinikanth marriage update
ரஜினியின் மகள் சவுந்தர்யாவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்ட சவுந்தர்யா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் சற்று பிஸியாக இருந்த சவுந்தர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்.
பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் அசோகன் என்பவரைதான் திருமணம் செய்தித்துக்கொள்ள போகிறார் சவுந்தர்யா. இந்நிலையில் பல பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.
இன்று காலை நடிகர் பிரபு வீட்டில் ரஜினி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரை சந்தித்துபேசியுள்ளார்.
அதன்பின் ரஜினி அளித்துள்ள பேட்டியில் சௌந்தர்யா நிச்சயதார்த்தம் திருநாவுக்கரசர் மூலமாக தான் நடந்தது. அதனால் முதல் பத்ரிக்கையை அவரிடம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.