வருங்கால கணவருடன் முதன்முறையாக ரஜினி மகள்! வைரலாகும் புகைப்படம்!
Sawntharya rajinikanth and ashokan photo goes viral
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களில் ஒருவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். சில வருடங்களுக்கு முன்பு அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் அதன்பின்னு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். மேலும் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தையும் இயக்கியுள்ளார் சவுந்தர்யா.
முதல் திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் ஆர்வமாக இருந்த இவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் அசோகன் என்பவரைதான் சவுந்தர்யா திருமணம் செய்துகொள்ளப்போகிறார். இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி விமர்சியாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் சௌந்தர்யா திருமணம் செய்யவுள்ள விஷாகனுடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. புகைப்படங்கள் இப்போது தான் முதல்முறையாக வெளியாகியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் அது வைரலாகியுள்ளது.