×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இராவணன் குறித்த சர்ச்சை கருத்து! கிளம்பிய எதிர்ப்புகள்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரமாண்ட ஆதிபுருஷ் பட ராவணன்!

இராவணன் குறித்து கூறிய கருத்துக்கு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் நடிகர் சைஃப் அலிகான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisement

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகுவதாக கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். மேலும் அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்கிறார். மேலும் சீதாவாக நடிகை கீர்த்தி சனன் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சைஃப் அலிகான், ஆதிபுருஷ் திரைப்படம் ராவணனின் நல்ல பக்கத்தை காட்டும் என்று கூறியிருந்தார். அது சர்ச்சையாகி சைஃப் அலிகானுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கடம் தனது டுவிட்டரில் அவர் கூறுவது சீதையை ராவணன் கடத்தியது நியாயப்படுத்தப்படுவது போல தெரிகிறது என கடுமையாக சாடியுள்ளார்.  

இந்த நிலையில் சைஃப் அலிகான், நான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், பலரது உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அறிகிறேன். எனவே எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.எனது கருத்தை திரும்ப பெறுகிறேன்.ராமர் எப்போதுமே நீதி மற்றும் வீரத்தின் அடையாளமாக இருக்கிறார்  தீமையை நன்மை வெற்றி கொள்வதே ஆதிபுருஷ் கதை என கூறியுள்ளார்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sayeep alikhan #Adhipurush #ravana
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story