திருமண உறுதி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, ஆர்யாவின் மாமியார் செய்த செயல்.!
sayeesha mother tweet about aarya
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவின் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் .இவர் பூஜா, நயன்தாரா, நஸ்ரியா என பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
பின்னர் ஆர்யாவுக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட் டு மாப்பிளை நிகழ்ச்சியின் மோளம் பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. ஆனால் அவர் அதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரைக்கூட திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் அவர் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அதுகுறித்து ஆர்யாவோ அல்லது சாயிஷா தரப்போ அதிகாரபூர்வமாக எந்ததகவலும் வெளியிடாமல் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தங்களது திருமணத்தை ஆர்யாஉறுதி செய்துள்ளார் .
மேலும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்நிலையில் சாயிஷாவின் அம்மா ஷஹீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எங்கள் எங்கள் வாழ்வின் அழகிய தருணம். மருமகனாக எங்கள் குடும்பத்திற்கு வருகைதரும் ஆர்யாவை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆர்யா, சாயிஸாவுக்கு ஆசிர்வாதங்கள் என்று பதிவிட்டுள்ளார்.