பட்டி தொட்டியெல்லாம் தெறிக்கவிட்ட தமிழ்பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சாயிஷா! வைரலாகும் மாஸ் வீடியோ!
Sayisha dance to chinna machan song in boat
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் நடிகை சாயிஷா யுவரத்னா என்ற படத்தில் நடிப்பதன் மூலம் கன்னட சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார்.
நடிகை சாயிஷாவுக்கு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது டாப் நடிகரான ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் தற்போது தனது தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ் பெண் ஒருவர் டெக்னோ மற்றும் டிரான்ஸ் பகுதிக்கு படகில் செல்லும்போது தமிழ் இசையைக் கேட்டால் இதுதான் நடக்கும் என பதிவிட்டு, சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை அள்ளுகிறது.