அடஅட.. வேற லெவல்!! சும்மா வளைத்து நெளித்து நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்த சாயிஷா!
பிரபல நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா இடையை வளைத்து நெளித்து நடனமாடும் வீடிய
பிரபல நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா இடையை வளைத்து நெளித்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அதன் ஹீரோ ஆர்யாவுடன் காதல் வயப்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அண்மையில் கூட இருவரும் இரண்டாவது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினர்.
ஆர்யா, சாயிஷா இருவரும் இறுதியாக டெடி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி குழந்தைகள் தொடங்கி அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது அவரது இடையை வளைத்து நெளித்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். மேலும் அந்த வீடியோ வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.