×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா! ஆர்யா மனைவி சாயிஷாவுக்கு இப்படியொரு ஆசையா.! வெளிப்படையாக அவரே கூறிய ரகசியம் இதுதான்!!

sayisha like to act in dance based movie

Advertisement

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படமே இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. அதனை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் .

மேலும் சாயிஷா நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் இருவரும் அவர்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மிகவும் கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் சூர்யா, ஆர்யா ஆகியோர் நடித்து வெளிவந்த காப்பான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் நான் சூர்யாவுடன் நடிப்பேன் என கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை. அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் அது எனது எதிர்காலத்தில் மிகவும் உதவும். நடிப்பதற்கு கண்கள் மட்டுமே போதும். 2 கண்களிலேயே அனைத்து உணர்வுகளையும்  வெளிப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ராம் லக்கன் என்ற இந்தி படத்தை ரீமேக் செய்தால் அதில் மாதுரி தீட்சித் நடித்த ராதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆசை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.மேலும் நான் நடன பயிற்சி பெற்றுளேன். எனவே எனது முழு நடன திறமையையும் வெளிபடுத்தும் வகையில் ஏதாவது ஒரு படத்திலேயாவது நடிக்க ஆசைப்படுகிறேன் என சாயிஷா கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sayisha #kappaan #wishes
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story