அருமையான பாடல்.. திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கேன்!! புகழ்ந்து தள்ளிய சீமான்.!
அருமையான பாடல்.. திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கேன்!! புகழ்ந்து தள்ளிய சீமான்.!
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து அனைவராலும் முணுமுணுக்க பட்டு வருகிறது.
இந்தநிலையில் இப்பாடல் குறித்து இயக்குனர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வெளிவந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும், அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி,பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும், தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும்!
அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி K.கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும் என தெரிவித்துள்ளார்.