"வாய்ப்பு இருந்தால் மனிஷா மீண்டும் என்னிடம் வருவார்" சீனு ராமசாமியின் சர்ச்சை பேச்சு..
வாய்ப்பு இருந்தால் மனிஷா மீண்டும் என்னிடம் வருவார் சீனு ராமசாமியின் சர்ச்சை பேச்சு..
2007ம் ஆண்டு "கூடல் நகர்" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது "இடம் பொருள் ஏவல்" படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவுக்கு படப்பிடிப்பின் போது சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக மனிஷா யாதவ் கூறியுள்ள ஆதாரம் தன்னிடம் உள்ளதென வலைப்பேச்சு பிஸ்மி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
அந்தத் திரைப்படம் இன்று வெளியாகாத நிலையில், மனிஷாவும் படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்த சீனு ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் மனிஷா 'ஒரு குப்பை கதை' இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில், "நான் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருந்தால் அவர் எதற்கு எனக்கு நன்றி சொல்லி பேசியுள்ளார்? அவர் 10 வருடங்கள் வரை சினிமாவில் நடித்துவிட்டு தான் போயிருக்கிறார். மீண்டும் வாய்ப்பு இருந்தால் என் படத்திலேயே கூட நடித்தார்" என்று கூறியுள்ளார்.