மாடித்தோட்டத்தில் பிஸி! சளி, காய்ச்சலை விரட்ட நடிகை சீதா சொன்ன சூப்பர் மருந்து! வீடியோ இதோ!!
மாடித்தோட்டத்தில் பிஸி! சளி, காய்ச்சலை விரட்ட நடிகை சீதா சொன்ன சூப்பர் மருந்து! வீடியோ இதோ!!
தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்த புதிய பாதை என்ற படத்தில் நடித்தபோது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. ஆனால், சீதாவின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெறியேறி, கடந்த 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இரு மகள்கள் பிறந்தனர். மேலும், ஒரு மகனை தத்தெடுத்து வளர்ந்தனர்.பின்னர் 10 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் சீரியல் மற்றும் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் 43வது வயதில் சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரையும் 6 ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்தார்.
மேலும் தற்போது தனது தாயுடன் வசித்து வரும் அவர் மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விளைச்சல் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்து குறித்து கூறியுள்ளார். துளசி, ஓமவள்ளி, புதினா, இளம் இஞ்சி இவற்றினை எடுத்துக்கொண்டு நன்றாக தட்டிப்போட்டு சிறிது மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சளி, காய்ச்சலுக்கு சரியாகும் என்று கூறியுள்ளார்.