மீண்டும் வருகிறார் கொக்கி குமார்! செல்வராகவனின் அதிரடி அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்
Selvaragan announcement about pudhupettai 2
இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் 2006ல் வெளியான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கி தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான அதிரடி ஹேங்ஸ்டர் திரைப்படம் புதுப்பேட்டை. இந்த படத்தில் தனுஷின் பெயரான கொக்கி குமார் இன்றும் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் என்ஜிகே படத்தினை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை பட்ததின் இரண்டாம் பாகத்தினை எடுக்கப்போவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். நேற்று கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை ரசிகர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "என்ஜிகே படத்தினை தொடர்ந்து என்ன படம் பன்னப்போகிறேன் என்பதை ரசிகர்களாகிய உங்களுக்காக சொல்கிறேன். அடுத்ததாக தனுஷை வைத்து படம் எடுக்கப்போவது முதலில் உறுதியானது. சரி எந்த மாதிரி படம் எடுக்கலாம் என்று விவாதித்த போது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.