×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்போ புரியல.. வெடித்த சர்ச்சை! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன்!! ஏன் தெரியுமா?

 தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயிப்போ காலனி,புதுப்பேட்டை, 

Advertisement

 தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயிப்போ காலனி,புதுப்பேட்டை,  இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் இயக்குனர் செல்வராகவன். இந்தநிலையில் 25 ஆண்டுகளாக இயக்குனராக இருந்த அவர் தற்போது சாணிக்காயிதம் திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியுள்ளார். 

இதற்கிடையில் செல்வராகவன் நீண்ட காலங்களுக்குப் பிறகு இயற்றிய நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கெட்ட குணங்களை கொண்ட எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்திற்கு ராம்சே எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் செல்வராகவனிடம், இப்படத்தில்  ராமசாமி என கடவுளை எதிர்க்கும் ஒரு தனிநபரின் பெயரை குறிப்பிட்டு வைக்கப்பட்டதா  என கேள்வி எழுப்பப்பட்டது

இதற்கு  செல்வராகவனும் ஆமாம் என்று கூறிய நிலையில்  பெரும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பர்களே அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.
    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Selvaragavan #Abologies #Ramasamy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story