பொன்ராம் சிவகார்த்திகேயன் இடையே வித்தியாசமான சென்டிமென்ட்: படம் ஹிட்டாகும் என உறுதி
பொன்ராம் சிவகார்த்திகேயன் இடையே வித்தியாசமான சென்டிமென்ட்: படம் ஹிட்டாகும் என உறுதி
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் இருவரும் மூன்றாவதாக இணையும் திரைப்படம் தான் சீமராஜா. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் செம ஹிட்.
இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. படம் சென்சார் செய்யப்பட்டு நேற்று அதற்க்கு யு சான்று கிடைத்தது.
இப்படம் 2மணி நேரம் 38 நிமிடமாகும்.சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் இருவரும் இணைந்து பணியாற்றிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் இந்த இரு படத்திற்க்கும் அதே அளவு நேரம் தான் . ஆதலால் இப்படத்தையும் அதே நேரத்திற்க்கு சுருக்கினால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என இயக்குனர் நம்புகிறார்.