37 வயதில் காதலனை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை... வைரலாகும் திருமண புகைப்படம்!!
37 வயதில் காதலனை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை... வைரலாகும் திருமண புகைப்படம்!!
கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா. அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஸ்வேதாவிற்கு சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
எனவே ஸ்வேதா சின்னத்திரை சீரியலில் தனது கவனத்தை செலுத்தினார். அதன்படி பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கடந்த 8 வருடங்களாக மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட சந்திரலேகா என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இந்நிலையில் ஸ்வேதா பிரபல தொகுப்பாளரான மால் முருகா என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அழகிய ஜோடிகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.