நிகழ்ச்சியில் தொகுப்பாளரை பளார் என அறைந்த பிரியமானவள் அவந்திகா! வைரல் வீடியோ!
serial artist slapped tv anchor
தமிழகம் மட்டும் இல்லாது இந்திய அளவில் மிக பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். தமிழ் தொலைக்காட்சிகளில் தற்பொழுது வரை முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். அதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்தான்.
தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் புத்தம்புதிய தொடர்கள் தான். அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சன் தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களான ராதிகா, ரம்யா கிருஷ்ணன், ரேவதி, நதியா, பானு என பல பிரபலங்கள் நடித்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தநிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பிரபல சீரியலான பிரியமானவள் தொடரில் நடித்த அவந்திகா பங்குபெற்றார். அதில் தொகுப்பாளர் நடித்து காட்டும்படி கேட்டுள்ளார் அவந்திகாவிடம். ஆனால் அவந்திகா உண்மையாலுமே பளார் என கன்னத்தில் அடித்துவிட்டார். அதற்கு தொகுப்பாளர் நடிக்க சொன்னா அடிச்சுடீங்களேம்மா என கதறியுள்ளார்.