"அதற்கெல்லாம் அது வேண்டும்.... அந்த தைரியம் விஜயிடம் கிடையாது..." பத்திரிகையாளர் செய்யாறு பாலு அதிரடி!
அதற்கெல்லாம் அது வேண்டும்.... அந்த தைரியம் விஜயிடம் கிடையாது... செய்யாறு பாலு அதிரடி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர் பட்டாளம் இவருக்கு தான் இருக்கிறது சமீபகாலமாகவே இவர் அரசியலுக்கு வருவார் என்று ஒரு கணிப்பு சினிமா துறையில் நிலவி வருகிறது.
இந்த கணிப்பு உண்மை என்பது போல அவரும் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றி வைத்தார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பொது மக்களுக்கும் உதவி வந்தார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்டம் தோறும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை மதிய உணவு வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது. இதனை விமர்சனம் செய்திருக்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
இது குறித்து பேசியிருக்கும் அவர் "அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புபவர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு அநீதி நடக்கும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அதையெல்லாம் செய்வதற்கு தளபதி விஜய்க்கு தைரியம் கிடையாது. ஆனால் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அதையெல்லாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே செய்தார் என்று குறிப்பிட்டார். மக்களுக்கு ஒரு வேளை சோறு போட்டால் அரசியல்வாதி ஆகிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.