×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் பிறந்தநாளில், தல அஜித் கொடுத்த செம சர்ப்ரைஸ்! இன்பஅதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன ஷாலினி!

shalini surprised by ajith on birthday

Advertisement

 தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.  தல அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி. அவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஷாலினி நடிப்பை விட்டுவிட்டு தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். 

இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் அதற்காக அஜித் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மிகவும் சர்ப்ரைஸாக பார்ட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். 

     மேலும் அது மட்டுமின்றி அவர் ஷாலினியின் குடும்பத்தாரிடம் பேசி அவரது பழைய பள்ளி நண்பர்களை தொடர்பு கொண்டு பார்ட்டிக்கு அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் ஷாலினி பிறந்தநாளன்று  டின்னருக்கு சென்று வரலாம் என தனது குழந்தைகள் மற்றும் ஷாலினியை சர்ப்ரைஸாக அங்கு அழைத்து வந்துள்ளார். 

அங்கு ஹோட்டலில் ஷாலினியின் நண்பர்கள் ஒவ்வொருவராக ஷாலினியை சந்தித்துள்ளனர். இதனைக் கண்ட ஷாலினி இன்ப அதிர்ச்சியில் அவர்களை கட்டியணைத்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை அஜித் ரசித்தபடி நின்றுள்ளார். பின்னரே அவருக்கு இது தனது கணவர் சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்தது என தெரியவந்துள்ளது. 

 மேலும் பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலில் ஷாலினியின் சிறுவயது புகைப்படங்கள் அனைத்தும் ஆங்காங்கே ஒளிபரப்பப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shalini #Ajith #birthday gift
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story