வைல்ட்கார்ட் என்ட்ரி: பிக்பாஸ் வீட்டிற்குள் தர்சனின் காதலி? வெளியான சுவாரசிய தகவல்.
Shanam shetty refused bigg boss wild card entry
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த சீசனில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த தர்சன்.
இவரும் நடிகை சனம் ஷெட்டியும் காதலிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ரியாக நுழைய சனம் செட்டியை அழைத்த போது அவர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பிக்பாஸ் நல்ல வாய்ப்பு, ஆனாலும் நம் திறமையை வைத்து தான் முன்னேற முடியும் என்றும் டைட்டிலை பெறாத போதிலும் ஹரிஷ் கல்யாண், ரைசா நல்ல படங்களில் நடித்துவருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நாம் என்னதான் நாமாக இயல்பாக இருக்க முயன்றாலும் முந்தைய சீசன் போட்டியாளர்களுடன் பார்வையாளர்கள் ஒப்பிடுகிறார்கள். எனவே தனக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.