நானும் விஜய்யின் தீவிர ரசிகன்! பீஸ்ட் புகழ் பாடிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்! வைரலாகும் பதிவு!!
நானும் விஜய்யின் தீவிர ரசிகன்! பீஸ்ட் புகழ் பாடிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்! வைரலாகும் பதிவு!!
தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டானது.
இந்நிலையில் அதனை கண்ட பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னைப் போலவே விஜய்யின் தீவிர ரசிகனாக இருக்கும் அட்லியுடன் இணைந்து பீஸ்ட் படத்தின் டிரெய்லரை பார்த்தேன். டிரெய்லர் மிகவும் சிறப்பாக, கச்சிதமாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்ட இயக்குனர் அட்லீயும் அதற்கு பதிலளித்து தனது டுவிட்டரில், என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் அண்ணாவின் பீஸ்ட் ஏப்ரல் 13 அன்று வெளியாகிறது. ஷாரூக் கானின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிகள். தங்கள் வாழ்த்து மிகவும் பெரியது என்று பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.