ஷில்பா ஷெட்டி விவாகரத்து வதந்தி எப்படி பரவியது?? வெளியான உண்மை!!
shilpa shetti divorce rumour
தமிழ் சினிமாவில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.
ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
சமீபத்தில் குடும்ப தகராறில் ராஜ்குந்தராவை ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்தி டைரக்டர் அனுராக் பாசு இந்த வதந்தியை பரப்பியது தெரியவந்தது.
டி.வி. ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஷில்பா ஷெட்டியும், அனுராக் பாசுவும் நடுவர்களாக உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து அதில் “கணவருடன் சண்டை போட்டு விட்டேன். அவரை விவாகரத்து செய்கிறேன்” என பதிவு செய்து ஷில்பா ஷெட்டியின் அம்மாவுக்கு அனுராக் பாசு அனுப்பியுள்ளார்.
அதை பார்த்து ஷில்பாவின் தாய் பதறிப்போய் போன் செய்து பேசியதும், அதனால் தான் இந்த விவாகரத்து வதந்தி பரவியதும் தெரியவந்தது.