அடேங்கப்பா! இது என்னடா புதுவிதமான உடற்பயிற்சியா இருக்கு.! வைரலாகும் ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் வீடியோ!!
Shilpa shetty exercise video viral
தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் அவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா என்பவரை கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷில்பா ஷெட்டி அடிக்கடி தனது புகைப்படங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.