சிவாஜி கணேசனின் கடைசி ஆசை.. உயிர் பிறியும் வரை அந்த விஷயத்தை பண்ணிட்டே இருக்கணுமென்று ஆசைப்பட்ட சிவாஜி.?
சிவாஜி கணேசனின் கடைசி ஆசை.. உயிர் பிறியும் வரை அந்த விஷயத்தை பண்ணிட்டே இருக்கணுமென்று ஆசைப்பட்ட சிவாஜி.?
தமிழ் திரை உலகின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்த காலத்திலேயே நடிப்பில் பட்டையை கிளப்பும் நடிகர் ஆவார். உயிருக்கும் மேலாக சினிமாவை மதித்த சிவாஜி கணேசனின் திரைப்படம் என்றாலே அந்த காலத்து ரசிகர்கள் ஆர்வமாக சென்று பார்ப்பார்கள்.
இதன்படி சிவாஜி கணேசனுக்கு வயதான பிறகு இதய கோளாறு ஏற்பட்டு நோய்வாய் பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நோய்வாய்ப்பட்ட போதும் கமலின் கட்டாயத்தினால் 'தேவர் மகன்' படத்தில் நடித்தார். இவரின் நடிப்புக்காகவே தேவர் மகன் படம் மிகப்பெரிய ஹிட் ஆகியது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக இவர் நடித்த பசும்பொன், ஒன்ஸ்மோர், என் ஆசை ராசாவே, மன்னவரு சின்னவரு, படையப்பா, பூப்பறிக்க வருகிறோம் போன்ற திரைப்படங்கள் பெரிதாக பேசப்பட்டன. இதனை தொடர்ந்து 2001 ஆம் வருடம் மூச்சு திணறல் ஏற்பட்டு ஜூலை 21 ஆம் தேதி உயிர் பிரிந்தார்.
இவ்வாறு சிவாஜி கணேசனின் பெருமைகள் பல உண்டு. இந்நிலையில் சிவாஜி கணேசனுக்கு தன் உயிர்விடும் வரை சினிமா துறையில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே கடைசி ஆசையாக இருந்தது. அவ்வாறே கடைசி வரைக்கும் விடாமுயற்சியுடன் தன் நடிப்பு திறமையால் மக்கள் நினைவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.