இன்று கோடியில் புரளும் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாம
ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும்.
பல முன்னணி நடிகர்களுக்கும் இணையாக இவரும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதேபோல் பலரும் இவரது படங்களை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் பார்ப்பது வழக்கம். ஏனென்றால் இவரது படங்களில் முகம் சுளிக்கும் விதமாக எந்தவொரு காட்சிகளும் இருக்காது. அதேபோல் சிவகார்த்திகேயன் சிகரெட் மற்றும் மதுபானம் அருந்துவது உள்ளிட்ட காட்சிகளில் நடிக்க மாட்டார்.
தனது திறமை மற்றும் விடா முயற்சியால் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அவரது திரைப்பயணம் ஒரு தொகுப்பாளராகவே தொடங்கியது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது மற்றும் ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார்.
காமெடி கலந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிவகார்த்திகேயனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தொகுப்பாளராக இருந்த சமயத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், விஜய் டிவியில் தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ஆரம்ப கால கட்டங்களில் ரூ. 2000 சம்பளமாக வாங்கி கொண்டு வேலை செய்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.