பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
சிறுவயது சீரியல் ஹீரோயின்
தனது டீன் பருவத்தை முடிக்கும் முன்பாகவே சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு அந்த சீரியலில் கிடைத்த புகழின் மூலம் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் சர்ச்சை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்தாரோ? அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பின்னர் சில நாட்களுக்கு சிவானி நாராயணன் பேசு பொருளாக இருந்த நிலையில், அதன் பிறகு அவர் காணாமல் போய்விட்டார். இருப்பினும் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார்.
இதையும் படிங்க: Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!
பிளாஸ்டிக் சர்ஜரி
இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு காரணம், அவரது சமீபத்திய புகைப்படங்களில் அவரது தோற்றமானது பயங்கர மாற்றத்துடன் இருக்கிறது. எனவே, தான் இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறி விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "கிளர்வோட்டம்" 96 பட இயக்குனரின் மெய்யழகனை கண்டு வாயடைத்து போய் சீமான் செய்த செயல்.!