"உடை விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது" சோபிதா துலிபாலா காட்டம்.!
உடை விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது சோபிதா துலிபாலா காட்டம்.!
2013ம் ஆண்டு மிஸ் இந்தியா எர்த் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் சோபிதா துலிபாலா . அதன்பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். 2016ல் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் ராகவ் 2.0' படத்தில் தான் சோபிதா முதலில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். தனது சிறப்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சோபிதா துலிபாலா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் மிக நெருங்கிய நட்பில் இருப்பாதாக சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறார். இந்நிலையில், 2013ல் நடந்த அழகிப்போட்டியில் நடுவராக வந்த நடிகை அசின், சோபிதாவிடம் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், "கல்லூரிகளில் மாணவிகள் இப்படித்தான் உடையணிந்து வரவேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறினால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு, "மாணவிகளின் உடை விஷயத்தில் நிர்வாகம் தலையிடக்கூடாது. யாரும் கலாச்சாரக் காவலர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சோபிதா கூறியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.