அதிர்ச்சி.! திடீரென உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜி.!?
அதிர்ச்சி.! திடீரென உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜி.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்து வந்தவர் டேனியல் பாலாஜி. இவர் தமிழில் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார்.
இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்கு பின்பு வடசென்னை, பிகில் போன்ற ஹிட் திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் சித்தி சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இதன் பிறகு தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் வில்லன் நடிகராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த டேனியல் பாலாஜ, 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இது போன்ற நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்பு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.