நடிகர் மோகன்லால் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக கெத்து காட்டவிருக்கும் பிரபல தமிழ்நடிகை! வெளியான மாஸ் தகவல்!
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
மலையாளத்தில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார். உன்னிகிருஷ்ணன் மற்றும் மோகன்லால் இருவரும் ஐந்தாவது முறையாக இணைந்துள்ளனர்.
ஆக்ஷன் கலந்த எண்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் அவர் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான கோஹினூர் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது விஷாலுடன் சக்ரா மற்றும் மாதவனுடன் மாறா என்ற படங்களில் நடித்து வருகிறார்.