ஆமா..! எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.! அதனால் நான் இதை செய்தேன்.! என்ன தவறு.? ஓப்பனாக பேசிய ஸ்ருதி ஹாசன்.!
Shruthi haasan reply about plastic surgery

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாகா அறிமுகமான இவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், தனது வெளிநாட்டு காதலனை பிரிந்ததில் இருந்து எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த ஸ்ருதி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இவர் இணைந்து நடித்த க்ராக் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி பதிவிட்ட புகைப்படம் ஒன்றில் அவருடைய உடல் முகம் அனைத்தும் வித்யாசமான தோற்றத்தில் இருந்தது. இதனால், ஸ்ருதி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என பலரும் பதிவிட்டு வந்தனர். இதனால் கடுப்பான ஸ்ருதி ஹாசன் இதற்கு பதிலளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆமாம்.. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துளேன். அதில் என்ன தவறு? இது எனக்கும் எனது ஹார்மோனுக்கும் நடுவிலான பிரச்சனை, இந்த பிரச்சனை பெண்களுக்கு எளிதில் புரிந்துவிடும். இதைப்போக்க நான் பிளாஸ்டிக் சிகிச்சை செய்து கொண்டேன். இதை யாரும் ஜட்ஜ் செய்ய அனுமதியில்லை என்று காட்டமாக பதிலளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.