நடுராத்திரியில், இதற்காக ஹோட்டல் ரூமிலிருந்து அலறியடித்து ஓடினேனா? உண்மையை போட்டுடைத்த பாடகி சுசித்ரா!
நள்ளிரவில் ஹோட்டல் ரூமில் இருந்து தான் அலறியடித்து ஓடியதாக வெளியான வதந்தி குறித்து பாடகி சுசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டு தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் சீசன் 4ல் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து புதிய போட்டியாளராக அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து முதன்முதலாக ரேகா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் பாடகி சுசித்ரா நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் நட்சத்திர விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் தன்னை யாரோ கொலை செய்ய வருகிறார்கள், என்னை காப்பாத்துங்க என வெளியே ஓடியதாகவும், பிறகு விடுதி மற்றும் பிக்பாஸ் குழுவினர் அவரை சமாதானப்படுத்தினர் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது அறையில் நான் பயந்துவிட்டதாகவும், வெளியே ஓடியதாகவும் வெளியான செய்திகளை நம்பவேண்டாம். நான் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன். என்னை நன்குக் கவனித்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற காட்சி, அறையில் இருக்கும்போது யார் புகார் அளிப்பார்கள் என்று தனது விடுதி அறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்