"என் வயித்துல அடிக்காதீங்க" கர்நாடகாவில் நடந்த பிரச்சனை குறித்து கண்கலங்கிய சித்தார்த்.?
என் வயித்துல அடிக்காதீங்க கர்நாடகாவில் நடந்த பிரச்சனை குறித்து கண்கலங்கிய சித்தார்த்.?
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், எழுத்தாளர் போன்ற பலவிதமான திறமைகளை கொண்டுள்ளார். முதன் முதலில் 'பாய்ஸ்' திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருந்தார்.
இது போன்ற நிலையில், தற்போது எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் 'சித்தா' படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் சித்தார்த்தின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதன்படி 'சித்தா' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கர்நாடகாவில் நடைபெற்றது. அப்போது காவிரி நதி நீர் பிரச்சினை காரணம் காட்டி அரசியல்வாதிகள் சித்தார்த்தை பேச விடாமல் பாதியிலேயே பத்திரிக்கையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டனர். இதையடுத்து பல நடிகர்கள் சித்தார்த்திற்கு ஆதரவளித்து பேசினார்கள்.
இந்நிலையில் இதுவரை இந்த பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல் இருந்த சித்தார்த், தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். "ஒரு தமிழ் தயாரிப்பாளருக்கு இப்படி நடந்ததை பற்றி தமிழ் தயாரிப்பாளர் சங்கம் இதுவரை எதுவும் பேசவில்லை. காசு போட்டு படம் தயாரித்திருக்கிறேன் என் வயிற்றில் அடிக்காதீங்க" என்று கண்கலங்கி பேசியிருக்கிறார்.