தற்கொலைக்கு முயன்ற சிம்பு பட நடிகை ... அறிவுரை கூறி அரசியலில் மாஸ் செய்ய வைத்த ராகுல் காந்தி.!
தற்கொலைக்கு முயன்ற சிம்பு பட நடிகை ... அறிவுரை கூறி அரசியலில் மாஸ் செய்ய வைத்த ராகுல் காந்தி.!
இயக்குனர் வெங்கடேசன் இயக்கத்தில் சிம்பு நடித்த குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. அந்தத் திரைப்படத்திற்கு பிறகு தனது திரை பெயராக ரம்யா என்றே மாற்றிக் கொண்டார். கன்னட மொழி திரைப்படங்களிலேயே முதன்மையாக நடித்து வந்த இவர் அவ்வப்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
குத்து திரைப்படத்திற்கு பிறகு பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பிரேக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கௌதம் என இயக்கத்தில் வாரணமாயிரம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த போதே இளம் வயதிலேயே தனது அரசியல் பயணத்தையும் தொடங்கினார் திவ்யா.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த இவர் அந்தக் கட்சியில் உட்கட்சி பூசல் காரணமாக அங்கிருந்து விலகினார். பின்னர் இவரது வளர்ப்பு தந்தை மரணமடையவே தனது உலகமே முடிந்து விட்டது என தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி திவ்யாவை சந்தித்து அவருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
அவரது அறிவுரைகளின் மூலம் புத்துணர்ச்சி பெற்ற இவர் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் தனது சிறப்பான பேச்சின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவருக்கு எம்பி சீட் கன்ஃபார்ம் என்று கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.