பார்டா.. பிரபல நடிகருக்கு பிறந்தநாள்! செம மாஸாக சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக ந
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதனைத் தொடர்ந்து அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் வந்த நிலையில் ஜெய் சுப்ரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, பலூன், நீயா 2 பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் நடிகர் ஜெய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் பிரபல முன்னணி நடிகரான சிம்பு கலந்து கொண்டு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இத்தகைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் ஜெய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.