அச்சோ.. அம்புட்டும் சூப்பர் ஹிட் படமாச்சே! நடிகர் சிம்பு எந்தெந்த படங்களை தவறவிட்டுள்ளார் பார்த்தீர்களா!!
அச்சோ.. அம்புட்டும் சூப்பர் ஹிட் படமாச்சே! நடிகர் சிம்பு எந்தெந்த படங்களை தவறவிட்டுள்ளார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவித்தது.
அதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு,பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அந்த படங்களை தொடர்ந்து சிம்பு ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கிடையில் சிம்பு தவறவிட்டு மாபெரும் ஹிட்டான படங்கள் குறித்த தகவல்கள் தற்போது பரவி வருகிறது. அதாவது சிம்பு, தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு, கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ, லிங்குசாமியின் வேட்டை போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் தவற விட்டுள்ளாராம்.
மேலும் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படத்தில் ஜீவா கேரக்டரில் நடிக்க சிம்புவிடம்தான் முதலில் கேட்கப்பட்டதாம். ஆனால் சில காரணங்களால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திலும் முதலில் சிம்புதான் நடிக்கவிருந்தாராம். பின்னர் சில காரணங்களால் அந்த வாய்ப்பும் தவறிப் போயுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.