×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் இந்த மாஸ் நடிகரா.! லுக்கே மிரள வைக்குதே.! வெளிவந்த மாஸ் போஸ்டர்!!

கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் இந்த மாஸ் நடிகரா.! லுக்கே மிரள வைக்குதே.! வெளிவந்த மாஸ் போஸ்டர்!!

Advertisement

கமலின் தக் லைஃப்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, உலக நாயகனாக கொடிகட்டி பறக்கும் நடிகர் கமல்  நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை  இயக்குகிறார். இப்படத்தின் மூலம் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல்- மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இணைந்துள்ள நட்சத்திரங்கள் 

தக் லைஃப் படத்தில் திரிஷா,கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

கெத்து காட்டும் சிம்பு 

தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர்கள் படத்திலிருந்து விலக துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்புவும், ஜெயம் ரவிக்கான கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் போஸ்டர் மற்றும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #thug life #poster
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story