அரசியலுக்கு வருகிறாரா சிம்பு? சென்னை திரும்பியதும் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு.
Simbu politics entry update
தாய்லாந்து நாட்டில் இருக்கும் நடிகர் சிம்பு விரைவில் சென்னை திரும்ப உள்ளார். சிம்பு சென்னை திரும்பியதும் தனது ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பல முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், மேலும் சிம்புவிடம் சில திட்டங்கள் இருப்பதாகவும், அதனை நிறைவேற்றவும், சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
சிம்பு ரசிகர்களின் இந்த தகவலை வைத்து பார்க்கையில் ஒருவேளை சிம்பு விரைவில் அரசியலுக்கு வரப்போகிறாரரோ என்று மக்களுக்கு தோன்றுகிறது. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் சிம்பு தனது தந்தையின் கட்சியில் இணைவாரா? அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது பெரிதாக எந்த படமும் சிம்புவிடம் கைவசம் இல்லை. ஹன்ஷிகா நடித்துவரும் மகா என்ற படத்தில் சிறப்பு வேடத்திலும், கவுதம் கார்த்திக்குடன் ஒரு படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.