ப்ளீஸ்.. ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க.! ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வைத்த வேண்டுகோள்.! ஏன்? என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
ப்ளீஸ்.. ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க.! ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வைத்த வேண்டுகோள்.! ஏன்? என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இறுதியாக நடித்திருந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் மல்லி பூ பாடல் இன்றுவரை ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெந்து அணிந்தது காடு படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது பேசிய நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே படம் குறித்து பல அப்டேட்டுகளை கேட்டுகொண்டே இருக்கிறீர்கள். உங்களது ஆர்வம் எங்களுக்கு நன்கு புரிகிறது. ஆனால் ஒரு படத்தை உங்களிடம் தரமாக கொண்டு வந்து சேர்ப்பதற்காக படக்குழு மிகவும் கடினமாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாள்தோறும் நீங்கள் அப்டேட் கொடுங்கள் என கேட்டுக் கொண்டே இருந்தால் தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
உங்களை மகிழ்விப்பது தான் எங்களது வேலை. எங்களுக்கு அதற்கான இடத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். ரசிகர்கள்தான் கதாநாயகர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவர். ஆனால் நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என நினைக்கிறேன். என் படத்திற்கு மட்டுமல்ல எந்த படத்திற்கும் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். இந்த தகவலை எனது பத்துதல படத்தின் இயக்குனர் சொல்ல சொன்னார் என்று சிம்பு கூறியுள்ளார்.