ஒருபக்கம் யாஷிகா, மறுபக்கம் ஐஸ்வர்யா! வைரலாகும் சிம்புவின் புகைப்படம்!
Simbu with yashika anandh and ishwarya
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. லைகா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. படம் வெளியாவதற்கு முன்பே சிம்புவாள் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. முதலில் பாலபிஷேகம் செய்யவேண்டாம் என்று சொன்ன சிம்பு, பின்னர் அண்டா, அண்டாவா பாலபிஷேகம் செய்யுங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதன்பின்னர் நான் அண்டா, அண்டாவா என் கட்டவுட்க்கு பாலபிஷேகம் செய்யசொல்லவில்லை, அண்டாவில் பாலை ஊற்றி அதை காய்ச்சி எல்லோருக்கும் கொடுங்கள் என்று சொன்னதாக கூறினார் சிம்பு. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியான வந்த ராஜாவாகத்தான் வருவேன் படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் நேற்று தனது 36 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் நடிகர் சிம்பு. பிரபலங்கள் பலரும் சிம்புவை வாழ்த்தினர். மேலும் சில பிரபலங்கள் சிம்புவை நேரில் சென்று வாழ்த்தி, அவருடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இருவரும் சிம்புவை நேரில் சென்று வாழ்த்தி அவருடன் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளனர்.
அந்த புகைப்படத்தில் நடுவில் சிம்பு இருக்க ஒருபுறம் ஐஸ்வர்யா, மறுபுறம் யாஷிகா இருவர் மீதும் சிம்பு கை போட்டவாறு உள்ள புகைப்படம் வைரலாகிவருகிறது.