நடிகை சிம்ரனின் மகன்கள் எப்படி உள்ளார்கள் தெரியுமா? வெளியான புகைப்படம்
simran 2 sons photo
தமிழ் சினிமாவில் 90’களில் தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கியவர் சிம்ரன். இவர் தனது இடையசைவால் இளைஞர்களை கிறங்கடித்தவர்.மேலும் இவர் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த ஏராளமான படங்கள் மெகா ஹிட் படங்கள் என்று தான் சொல்லவேண்டும்.
சக நடிகைகளான லைலா, ஷாலினி, ரம்பா, ஜோதிகா மற்றும் ரோஜா இவர் திரைத்துறையில் இருந்த காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டவர்கள். இவர்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு தன் இடையசைவாலும் வசீகரப்புன்னகையாலும் கோடி ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் சிம்ரன்.
இவர் நடித்த ஜோடி, வாலி, துள்ளாத மனமும் துள்ளும், நேருக்கு நேர், ப்ரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டால், படங்கள் இப்போதும் பேசப்படும் படங்களாக மாறியுள்ளன.மேலும் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது சிறு வயது நண்பனான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தற்போது அதீப் மற்றும் ஆடிட் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பதிவிட்டுள்ளார்.